விழுப்புரம் ( தெற்கு ) மாவட்ட தி.மு.கழக பொறுப்பாளர் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி பற்றிய ஒரு பார்வை.
விழுப்புரம் ( தெற்கு ) மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பொன்.கெளதமசிகாமணி தமிழ்நாடு அமைச்சரும் , தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளருமான முனைவர் க.பொன்முடி – திருமதி விசாலாட்சி அம்மாள் அவர்களின் மூத்த மகனாவார்.
21.08.1974 ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய சகோதர் டாக்டர் பொன்.அசோக் சிகாமணி.
டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி,உயர்நிலைப்படிப்பை விழுப்புரம் இராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியிலும்,
மேல்நிலைப் படிப்பை சென்னை அடையார் ”St.Michael’s Academy” பள்ளியிலும் பயின்றார். இவர் எலும்பு முறிவு மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மேலும் எலும்பு முறிவு சிறப்பு சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் தனது தந்தை முனைவர் க.பொன்முடிப் போலவே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், கழகத் தலைவர் தளபதி ஆகியோரின் கொள்கைகளைப்
பின்பற்றுபவர்.
அவருடைய திருமணம் சாதி மறுப்புத் திருமணமாகவும்,சீர்திருத்த திருமணமாகவும் தலைவர் கலைஞர் தலைமையில்,
கழகத்தலைவர் முக.ஸ்டாலின் முன்னிலையில் 20.01.2002 ஆண்டு மருத்துவர் கவிதா கெளதம் அவர்களுடன் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் தற்போது இவர்களின்
மூவரின் உருவில் வாழும் கழகத்தலைவர் முக.ஸ்டாலின் மீதும் தி.மு.கழகத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
இவருடைய அரசியல் பயணம் தளபதி நற்பணி மன்றத்தின் மூலம் தொடங்கியது. ”தளபதி நற்பணி மன்றம்’ என்ற மாபெரும் மன்றத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு, கல்லூரிப்படிப்பு படிப்பதற்கான உதவிகளை செய்துள்ளார். மேலும் படிப்பிற்கு பிறகு அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
தளபதி நற்பணி மன்றத்தின் தலைவராக இருக்கும் டாக்டர் பொன்.கெளதமசிகாமணி ஏற்பாட்டில் 2005 ஆம் ஆண்டு , தமிழ்நாடு முதலமைச்சர் , அன்றைய தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை “இளைஞர் எழுச்சி நாள் ” விழாவாக விழுப்புரத்தில் முதன் முதலில் முரசொலி நிர்வாக இயக்குநர் திரு.உதயநிதிஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான இறகு பந்துப் போட்டிகளை நடத்தினார்.
2007 ஆம் ஆண்டு கபடி, கைப்பந்து , இறகு பந்து , செஸ் உள்ளிட்ட 9 விளையாட்டுகளை விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக நடத்தினார்.2010 ம் ஆண்டு சென்னையில் சர்வதேச பீச் வாலிபால் போட்டியை வெற்றிகரமாக நடத்தி திரு.சிவந்தி ஆதித்தன் அவர்களின் பாராட்டைப் பெற்று தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் செயல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2011 லவ் ஜூனியர் சேம்பியன் ஷரீப் போட்டியை நடத்தினார்.2023 ஆம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான கபடி போட்டியை மிக பிரம்மாண்டமாக நடத்தி தமிழ்நாட்டையே விழுப்புரம் பக்கம் திருப்பி பார்க்க செய்தார்.
தனது சிறப்பான செயல்பாட்டின் காரணமாக 2019 ம் ஆண்டு தமிழ்நாடு கைப்பந்து சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு , இன்று வரை தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.விழுப்புரம் மாவட்ட அனைத்து விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி அவர்கள் விழுப்புரம் மாவட்டம் மட்டுமன்றி மாநிலம் முழுக்க உள்ள திறமை வாய்ந்த இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் , சீருடைகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்து அவர்கள் சிறந்து விளங்கும் விளையாட்டுகளில் அவர்களின் திறமைகளை வெளிகொண்டு வர பல்வேறு நிலைகளில் உதவி வருகிறார்.
தளபதி நற்பணி மன்றத்தின் சார்பில் டாக்டர் பொன்.கெளதமசிகாமணி அவர்களின் முழு செலவில் 2010 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிரமாண்டமான முழு உருவ வெண்கல சிலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நிறுவப்பட்டு , தலைவர் கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது இவர் அரசியல்
பயணத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
கழகத் தலைவர் தளபதி அவர்கள் சொல்லுக்கேற்ப ”ஓர் இனம்” ”ஒரே இரத்தம்” என்ற மாபெரும் இரத்த தான முகாம்களை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து கழகத்தலைவர் தளபதி அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் இளைஞர் எழுச்சி நாளன்று
நடந்தி வருகிறார்.
தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் ஆண்டுதோறும் தளபதி நற்பணி மன்றம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட அளிவிலான
இறகுப்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகளையும் பாராட்டுகளை வழங்கி இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்குவித்து வருகிறார். ஆண்டு தோறும் இளைஞர் எழுச்சி நாளில் தளபதி நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கும்,கழக மூத்த முன்னோடிகளுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதை வழக்கமாக கொண்டவர் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி.
2006 ம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற கழக முதல் இளைஞர் அணி மாநாட்டில் விழுப்புரம் மாவட்ட இளைஞர் அணியினருக்கு தலைமை ஏற்று அணிவகுப்பை வழிநடத்தினார்.கழகம் அறிவித்த அனைத்து ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்களிலும் தொண்டர்களோடு கழகக் கொடியை பிடித்துக் கொண்டு கலந்து கொள்பவர்.கழக இளைஞரணி உறுப்பினர்களையும், கழக
உறுப்பினர்களையும் சேர்ப்பதில் தனிக் கவனம் செலுத்தி உறுப்பினர் படிவங்களை தானே ஊராட்சி மற்றும் வார்டு வாரியாக சென்று உறுப்பினர்களை சேர்ப்பார்.மொத்தத்தில் கழகமே மூச்சாக கொண்டு களத்தில் வேலை செய்பவர் தான் டாக்டர்.பொன்.கெளதமசிகாமணி.
கடந்த 5 ஆண்டுகளாக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றினார். அதில் குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்த பெருமை இவரையேச் சாரும்.