கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கள்ளசாராய விவகாரத்தில் திருக்கோவிலூர் டிஎஸ்பி உட்பட ஒன்பது பேர் அதிரடியாக தமிழக முதலமைச்சர் பணி இடைநீக்கம் செய்தார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திருக்கோவிலூரின் புதிய டிஎஸ்பியாக பார்த்திபன் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற நாள் முதல் திருக்கோவிலூரில் காவல்துறை வட்டாரத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினார்.
இதன் மூலம் நகரின் மையப் பகுதியில் காலை மற்றும் மாலை பள்ளி கல்லூரி விடும் நேரங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் நான்குமுனை, ஐந்து முனை சந்திப்பு, ஏரிகரை மூலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.
இதனை அடுத்து அந்த அனைத்து இடங்களிலும் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசாரை காலை மாலை என இரு வேலைகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தினார். மேலும் ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தில் அதிகப்படியான நபர்கள் என சட்ட ஒழுங்கை மீறிய அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறத்தில் தென்பெண்ணை ஆற்றில் மணல்கொள்ளை நடைபெறுவதாக டிஎஸ்பிக்கு வந்த புகாரை அடுத்து இரவு நேரங்களில் உட்கோட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு மணலூர்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தில் தனிப்படை போலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற உதவிஆய்வாளர் ராஜசேகர், சட்டத்திற்கு புறம்பாக மினிசரக்கு வாகனத்தில் ஒரு யூனிட் மண் மூட்டைகளை ஏற்றி இருந்தது தெரியவந்தது. உதவி ஆய்வாளர் வருவதை கண்ட மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து விட ஆற்றில் நின்றிருந்த அஷோக் லையலண்ட் தோஸ்த் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மணலூர்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
டிஎஸ்பி பொறுப்பேற்ற நாள் முதல் திருக்கோவிலூரில் நிலவி வந்த போக்குவரத்து நெரிசலையும் சட்ட ஒழுங்கு பிரச்சனையும் கையில் எடுத்து அடுத்தடுத்து தனிப்படை அமைத்து டிஎஸ்பி பார்த்திபன் அதிரடி காட்டி வருவது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.