கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருக்கோவிலூர் M.பாரஸ்மல் ஜெயின் அறக்கட்டளை மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண்சிகிச்சை முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் தலைமையில், சங்கச் செயலாளர் MS.கோதம்சந்த் முன்னிலையில் நடைபெற்றது.150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
50க்கும் மேற்பட்டோர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு கோவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் M.பாரஸ்மல் ஜெயின் அறகட்டளை நிர்வாகிகள் ஜெய்சந்த்,சுனில் குமார், அரியந்த்,ரோட்டரி சங்க சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன், ரோட்டரி சங்கர் உறுப்பினர்கள் முத்து குமாரசாமி, மகாவீர்சந்த், ராதாகிருஷ்ணன், சந்திரசேகர், R.C.C. குழும நிர்வாகிகள் சிதம்பரநாதன்,தேவி பாலமுருகன் ,ரமேஷ்,குருமூர்த்தி,ஹரிகிருஷ்ணன், கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் ,செவிலியர் மற்றும் ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.