கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைவதாகவும் அதனால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவியது அதனையடுத்து 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளன
உள்ளாட்சி பதவி காலம் 19.10.2026 ஆம் தேதி முடிவடைவதாகவும் அப்பொழுதுதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் எனவே அந்தந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து அந்தப் பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திரு.பிரசாந்த் அவர்கள் உத்தரவு பிறப்பித்ததோடு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.