கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் பகுதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் பாஜக நகர தலைவர் பத்ரி நாராயணன் மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட சுற்றுப்புற சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட செயலாளர் புவனேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் ஏழுமலை அழகேசன், ராஜேந்திரன், சங்கர் பிரபாகரன், செந்தில்குமார், மதன் பரணி, சுப்பிரமணியம், கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.