கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று 19ஆவது ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. போதிய கவுன்சிலர்கள் வராததால் 11 மணிக்கு நடக்க வேண்டிய கூட்டம் காலதாமதமாக 12க்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பட்டியலிட்டு பேசியுள்ளனர். மேலும் எம் ஜி என் ஆர் ஜி வேலையில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாகவும், போதிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு முறையாக பதில் அளிக்காததை அடுத்து அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
மேலும் இது குறித்து பேட்டி அளித்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் கூறுகையில்:-தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரைவில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பல்வேறு கிராமங்களில் பல திட்டப் பணிகளுக்கு நடைபெறாமலே பணிகள் முடிவடைந்ததாக கூறி பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது.