கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இயங்கி வரும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையம் ஆகிய இரண்டு பகுதிகளில் இன்று விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதியப்படும் வழக்குகள் குறித்தும், போக்சோ வழக்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை ஆய்வு செய்தார், அப்போது உடனடியாக திருக்கோவிலூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு என தனி காவல் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இந்த ஆய்வின் போது, திருக்கோவிலூர் கூட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.