கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில்,
இன்று மாலையில் திருக்கோவிலூர் அதன் சுற்றுவட்டார பகுதியான, அரும்பாக்கம், கீழ் தாழனூர், மேமாலூர், வேங்கூர், கீரனூர், வடக்குநெமிலி,, ஆவியூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று இடியுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் வெல்லம் போல் செல்கிறது.
இந்த கனமழையால் பொதுமக்கள், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,தற்போது இந்த கனமழையால் குளிர்ச்சியான காற்று வீசுகின்றது.