கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த வன்னிபுரம் என்னுமிடத்தில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 4வது அலகில் பயங்கர தீ விபத்து,
கெமிக்கல்ஸ் தயாரிக்கப்படும் அந்த அலகில் தீ விபத்து காரணமாக கிளம்பிய புகையால் மற்ற அலகுகளில் நைட் சிப்ட் வேலைபார்த்து வரும் தொழிலாளர்கள் புகையை சுவாசிக்க கூடாது என்பதற்காக 3000 பேர் வீடுகளுக்கு திரும்பாமல் தொழிற்சாலைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்..
டாடா நிறுவனத்தின் கெமிக்கல் அலகில் பயங்கர தீ விபத்து காரணமாக, டாடா நிறுவனத்தின் அனைத்து அலகுகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.