விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த அஞ்சுகம் கணேசன் என்பவர் இருந்து வருகிறார்,
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி புதுநகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சாலை குடிநீர் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்ற கோரி பலமுறை மனு மனு அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனால் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும் கூறி மொத்தமுள்ள 15 கவுன்சிலர்கள் இருந்து வருகின்றனர் பேரூராட்சி தலைவர் அஞ்சுகம் ஆதரவாளர்கள் 3 பேரை தவிர 9 திமுக கவுன்சிலர் மற்றும் மூன்று அதிமுக கவுன்சிலர் என 12 பேர் பேரூராட்சி தலைவரை மாற்றக் கோரி மன்ற கூட்டத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகளை முன்வைத்து பேசுவதற்கு முன்பு பேரூராட்சி தலைவர் இருக்கையை விட்டு வெளியே சென்றதால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் வரை இனிமேல் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என ஆத்திரமடைந்து வெளியில் சென்றனர்.
வனத்துறை அமைச்சர் பொன்முடி தலையிட்டு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் முன் வைக்கப்படும் கோரிக்கையாக உள்ளது.