திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக வனத்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி.,இ.ஆ.ப., ஆகியோர் நாளை (02.10.2024) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சிகளின் விவரம்.
- காலை : 10.00 மணி அளவில் முகையூர் ஒன்றியம்,V.புத்தூர் கிராமத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
- காலை 11 மணி அளவில் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சின்னசெவலை கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
3.காலை 11:30 மணி அளவில் திருவெண்ணைநல்லூர் ஒன்றியம் சின்ன செவலை கிராமத்தில் கிராம ஊராட்சி செயலக கட்டிடம் திறந்து வைக்கின்றனர்.
4.காலை 11:45 மணி அளவில் திருவெண்ணைநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு விழா கல்லூரி சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கின்றனர்.என தெரிவிக்கப்படுள்ளது.