கரும்பில் அதிக லாபம் பெற நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்வீர் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் கரும்பு பெருக்கு அலுவலர் தகவல் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம்,திருவெண்ணைநல்லூரை அடுத்த பெரியசெவலையில் உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் மற்றும் கரும்பு பெருக்கு அலுவலர் வில்லியம்ஆண்டணி ஆகியோர் பேசுகையில் கரும்பில் அதிக லாபம் பெற நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்ய வேண்டும் அத்தோடு சொட்டு நீர் பாசனம் பயன்படுத்தினால் நீரின் அளவு பாதியாக குறைக்கப்படும் 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன கருவிகள் அரசால் வழங்கப்படுகிறது ஆகவே விவசாயிகள் எதிர்கால நீர் தேவையை உணர்ந்து அனைத்து கரும்பு விவசாயிகளும் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்வராயன் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் பக்தவச்சலம்,வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கரும்பு அலுவலர் ஆனந்தஜோதி,நெட்ட பார் உழவியல் அலுவலர் சிவசங்கர்,கரும்பு உதவி அலுவலர்கள்,உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்,இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை வட்டார தொழில் நுட்ப மேலாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.