விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அருங்குருக்கை கிராமம்.
இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அருங்குருக்கை கிராமத்தில் தெற்கு தெரு, மன்மதன் கோவில் தெரு, பாஞ்சாலி அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாக்கடை நீரும், மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த சம்பவம் குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திறந்து சாலைகளில் தேங்கி இருக்கும் சாக்கடையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இனி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டமாக மறியல் போராட்டம், ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.