திருக்கோவிலூர் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் கலந்து கொண்டார். அதிமுக 53 ஆம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது, அனைத்து வீடுகளிலும் அதிமுக கொடியேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி;அதிமுகவுக்கு ஒரு வரலாறு இருக்கிறது, இன்றைக்கு பல பேர் வந்திருக்கிறார்கள் நாங்கள் முதலமைச்சர் ஆவோம் ஆட்சியைப் பிடிப்போம் என்று, எல்லாருமே எம்ஜிஆராக ஆக முடியாது. சினிமாவில் கூட எம்ஜிஆர்ரை கீரி பார்க்க கூட முடியாது இன்றைக்கும் எம்ஜிஆர் படங்கள் பார்க்கின்றார்கள் சினிமாவில் இருந்து வந்த எம்ஜிஆர்., ஜெயலலிதா, இவர்களுக்கு மட்டும் தான் அங்கீகாரம் இருக்கிறது. இதுக்கு மேல் நான் அரசியல் பேச விரும்பவில்லை ரொம்ப டீப்பாக போக விரும்பவில்லை என பேசினார்.
மேலும் ஒவ்வொரு அதிமுக நிர்வாகிகள் இல்லத்திலும் வருகின்ற 17ஆம் தேதி கழகத்தின் 53ம் ஆண்டு விழா ஒட்டி கட்சிக்கொடி ஏற்றுவதற்கு,அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு மாற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் கட்சி கொடியினை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. குமரகுரு திருக்கோவிலூர் நகர செயலாளர் சுப்புரமணியின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் பாக்யராஜ்,முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகமூர்த்தி, முன்னாள் நகரச் செயலாளர் இளவரசன்,மாவட்ட மாணவர் அணி தலைவர் பார்த்திபன் , மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பிர அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.