கள்ளக்குறிச்சி மாவட்டம், ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில் உலக போலியோ ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி வரும் 24ம் தேதி காலை 9.30 மணி அளவில், திருக்கோவிலூர் அங்கவை சங்கவை மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்திலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த பேரணி தொடங்க உள்ளது.இந்த நிகழ்வினை திருக்கோவிலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் கலந்து கொண்டு துவங்கி வைக்க உள்ளார்.
எனவே இதில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.