தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் அமுதம் அங்காடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் வெளிச்சந்தையில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தி, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் நோக்கில், நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த பண்டகசாலைகள் மூலம் பல்பொருள் அங்காடிகள் நடத்தப்படுகின்றன.
சுய சேவை சேவைமுறையில் இயங்கும் இந்த அங்காடிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.
அமுதம் மக்கள் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலை கடைகளுக்கு அமுதம் பிளஸ் என்ற பெயரில் ஒரு மாத மளிகை பொருட்கள் 15 பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூபாய் 499 -க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
அதனை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.