திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில் வரும் 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
திருவெண்ணெய்நல்லுார் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில், கலெக்டர் பழனி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் 14ம் தேதி வியாழக்கிழமை காலை 10:00 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொள்ள உள்ளார்கள்.
முகாமின்போது, கலெக்டர், பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். எனவே, பொதுமக்கள், மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொண்டு, வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.