கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம், காந்தி ஜெயந்தி முன்னிட்டு ‘ஒற்றுமையே வலிமை’ வலியுறுத்தி பிரஷ்க்கு பதிலாக மூன்று மதங்களான இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் “மதக் குறியீடுகள் பயன்படுத்தி காந்தி ஓவியத்தை வரைந்தார்.
அண்ணல் காந்தி வலியுறுத்திய நாட்டுப்பற்று என்பது இந்தியாவின் நன்மைக்காகவும், அதன் வலிமைக்காகவும் மட்டுமின்றி, அது உலகம் தழுவியதாக இருக்க வேண்டுமென்று எண்ணினார். தேசியத்தின் மீதும், அதன் ஒற்றுமையின் வலிமை மீதும் அளவற்ற நம்பிக்கை உடையவராக அண்ணல் காந்தி விளங்கினார்.
இந்தியாவில் மக்கள் மொழி, மதம், கலாச்சாரம், பண்டிகைகள் போன்றவற்றில் வேறு பட்டவர்கள், இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், குறிப்பிடத்தக்க ஒற்றுமை உணர்வு நம்மிடையே நிலவுகிறது. அதனால்தான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தேசமாக உலகின் முன், முன்வைக்கப்படுது. இத்தனை வேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்தியாவில் அனைவரும் தேசத்தின் மீது மிகுந்த அன்புடன் வாழ்கின்றனர். இந்த அன்புதான் மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்திய மக்களை ஒன்றிணைப்பதில் தேசியமும் தேச பக்தியும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வேற்றுமையில் ஒற்றுமை ஒரு தேசத்தின் நல்லிணக்கத்தையும், அமைதியும் அதிகரிக்கிறது. அது ஒரு தேசத்தின் ஒற்றுமையின் வலிமையைக் காட்டுகிறது.
ஓவிய ஆசிரியர் செல்வம் காந்தி ஜெயந்தி முன்னிட்டும், இந்திய தேசத்தின் ‘ஒற்றுமையை வலியுறுத்தியும்’ பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல், மூன்றும் மதங்களான இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் “மத அடையாளக் குறியீடுகளை” பயன்படுத்தி அதாவது “மூன்று மத அடையாளக் குறியீடுகள்” இந்து மத ஓம், முஸ்லிம் பிறை, கிறிஸ்துவம் சிலுவை ஆகியவற்றை பயன்படுத்தி நீர்வண்ணத்தில் தொட்டு அண்ணல் காந்தியடிகள் எட்டு நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.