கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்துள்ள அலியாபாத் பாளையம் கிராமம்.
இந்த கிராமத்தில் நேற்று அதிகாலை சிலர் ஏரிக்கரை ஓரமாக அமைந்துள்ள அம்மன் கோவிலின் உள் பகுதியில் பின்புறத்தில் கோவிலில் தூய்மை பணி மற்றும் பூஜை செய்வதற்கு உதவியாக இருந்த மூதாட்டி ஆனந்தாயி(72) என்பவர் உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரிஷிவந்தியம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் மூதாட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் அல்லது வேறு காரணத்தினால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்நிலையில் உடற்கூறு ஆய்வில் மூதாட்டி கற்பழிப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.
இந்த நிலையில் இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலின் பெயரில் நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் ஆய்வாளர் பாலாஜி ஆகியோர்களிடம் மூதாட்டி உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் டிஎஸ்பி மனோஜ் குமார் மேற்பார்வையில் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவச்சந்திரன், நந்தகோபால் காவலர்கள் ராமச்சந்திரன், பாஸ்கரன், சிவஜோதி, வீரப்பன் சிவராமன், மணிமாறன் உள்ளிட்ட காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மூதாட்டியின் கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோவில் உள்பகுதியில் ஆண் ஒருவரின் காலனி இருந்துள்ளது. அதனை வைத்து தனிப்படை போலீசார் மேற்கொண்டு விசாரணையை தீவிர படுத்தினர்.மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட போது காலணிகளை மோப்பம் பிடித்த ராக்கி என்னும் மோப்பநாய் கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் ஏரியின் உள்பகுதியில் மது பாட்டில்கள் நிறைந்த இடத்தை காண்பித்துள்ளது.
பின்னர் தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் ,கார்த்தி, அலெக்ஸ்ஆகிய மூன்று நபர்கள் மோப்பநாய் காண்பித்த அந்தப் பகுதியில் மது அருந்தியது விசாரணையில் தெரிய வந்தது.இதனை அடுத்து மூன்று நபர்களையும் காவல் நிலையம் அழைத்து வந்த காவல்துறையினருக்கு உண்டான பாணியில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் மூவரும் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஏரி பகுதியில் மது அருந்தியதும், அதில் ஜெயசீலன் 10.45 மணிக்கு வீட்டிற்கு சென்று விட, கார்த்தி என்பாரும் 11.15 மணிக்கு வீட்டிற்கு சென்றதும் தெரிய வருகிறது.பின்னர் கடைசியாக தனியாக இருந்த அலெக்ஸ் அதீத போதையில் தட்டு தடுமாறி ஏரியிலிருந்து கோவிலுக்குள் வந்துள்ளார்.
போதையில் இருந்த அலெக்சை பார்த்த மூதாட்டி ஆனந்தாயி மது போதையில் கோவிலுக்குள் வரக்கூடாது என எச்சரித்ததாக கூறப்படுகிறது.போதையின் உச்சத்தில் இருந்து அலெக்ஸ் மூதாட்டி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கோவிலுக்குள் வந்து உள்ளான். பின்னர் அதீத போதையால் இருந்த கோவிலுக்குள் வந்த தன்னை வசைப்பாடிய மூதாட்டி ஆனந்தாயை எட்டி உதைத்து கடுமையாக தாக்கியுள்ளான்.
இதில் ஆனந்தாயி மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார்.பின்னர் அவரை கோவிலில் முன் பகுதியில் இருந்து பின்பகுதிக்கு தரதரவென இழுத்துச் சென்று போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளான்.இதனை அடுத்து குற்றவாளி அலெக்சை கைது செய்த போலீசார் அவனை சிறையில் அடைத்தனர்.
மூதாட்டி இறந்து 24 மணி நேரத்திற்குள் காலனி ஒன்றை வைத்து குற்றவாளியை தட்டி தூக்கிய தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஎஸ்பி மனோஜ் குமார் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.