விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வருவாய் வட்டாட்சியர் குடியிருப்பு, வேளாண் துறையின் விதைப்பண்ணை கட்டிடம், மழையம்ப்பட்டு கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய கட்டிடங்களை அமைச்சர் க.பொன்முடி திறந்துவைத்தார். இதன் தொடர்ச்சியாக, திருவெண்ணைநல்லூர் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் தமிழகத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்ட கலைஞர் படிப்பகத்தையும் அமைச்சர்க்க பொன்முடி ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர் இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் க.பொன்முடி; முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் திறன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களது ஆணைக்கிணங்க இன்று இந்த நூலகம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனை பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இதனைப் பயன்படுத்தி IAS IPS உள்ளிட்ட சர்வீஸ் கமிஷன் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமென பள்ளி மாணவர்களிடையே கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வின் போது பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் திமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.