தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் பல மாநிலங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலைத்துறை கூறியுள்ளது.
இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, குஜராத் பிராந்தியம், மத்திய மகாராஷ்டிரா, கடலோர ஆந்திரா, ஏனாம், தெலுங்கானா, கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகா, கேரளா, மாஹே, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், பீகார், துணை இமயமலை மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், சவுராஷ்டிரா, கட்ச், மராத்வாடா, ராயலசீமா, வடக்கு உள் கர்நாடகா மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், தெலுங்கானா, ஜம்மு-காஷ்மீர், லடாக், கில்கிட்-பால்டிஸ்தான், முசாபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், விதர்பா, பீகார், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளது.