வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவ உள்ளது. திமுக,பாஜக,அதிமுக என மும்முனை போட்டி உருவாகியுள்ளது. திமுக தரப்பில் பெரிய கூட்டணி இருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு குறைவான சீட் ஒதுக்கப்படும் என தகவல்கள் உருவாகி உள்ளது.
மேலும் தி.மு.க விலிருந்து பல கட்சிகள் வெளியேற வாய்ப்புகளும் அதிமாக காணப்படுகிறது. அதற்கு உதாரணம் தி.மு.க விற்கு பக்கபலமாக இருந்த எஸ்.டி.பி.ஐ கட்சி அதிமுக பக்கம் சாய்ந்துள்ளது.இதே போல் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு தாவும் சூழ்நிலை உள்ளது.
மேலும் திமுக தங்களின் மேல் அதிருப்தியில் உள்ள மக்களை சரிகட்ட முக்கிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் சிறு கட்சிகளை கழட்டி விடவும் முடிவு செய்துள்ளது. இதில் தேமுதிக மற்றும் பாமகவை உள்ளே இழுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் பல லட்சம் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினார்கள்.இது தமிழக அரசியலில் சிறு திருப்பமாக அமைந்துள்ளது.
ஏனென்றால் விஜயகாந்த் மறைவின் அனுதாப ஓட்டுகள் எந்த கட்சிக்கு போகும் என்பதாகும். தேமுதிகவை இழுக்க இரு திராவிட கட்சிகளும் முயற்சித்து வருகிறது. பாஜகவும் தான் தேமுதிகவுடன் நட்புறவை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தே.மு.தி.கவை தங்கள் இழுப்பதற்காக திமுக வேலைகளை துவங்கி உள்ளது. அதில் முக்கியமானது தான் அரசு மரியாதையுடன் கேப்டன் அவர்களின் இறுதி சடங்கை நடத்தியது.அதில் முக்கியமானது 72 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. காமராஜருக்கு பிறகு விஜயகாந்த் அவர்களுக்கு தான் 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாரும் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு 62 குண்டுகள்,திமுக முன்னாள் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 20 குண்டுகள் முழக்கத்துடன் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேப்டன் இறுதி சடங்கில் திமுக நற்பெயரை வாங்கியது என்றே சொல்லலாம்.
இதை வைத்தும் தேமுதிகவுடன் உறவை மேம்படுத்தியது திமுக மேலும் தேமுதிகவிற்கு ஒரு டீலும் கொடுத்துள்ளது அந்த டீலானது ஒரு.எம்.பி சீட் அல்லது ராஜ்யசபா எம்.பி சீட் தருவதாக வாக்குறுதியை அளித்துள்ளது. இது குறித்து ஆலோசித்து வருகிறது தே.மு.தி.க. மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் தம்பியை சுதீஷை டெல்லிக்கு அனுப்பலாம் என்ற முடிவில் உள்ளதாக தே.மு.தி.க வட்டாரங்கள் கூறி வருகிறது.
பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் பொறுப்பேற்றுள்ளார்.அதன் பின் நடக்கும் முக்கிய தேர்தல் இது இந்த தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகா வேண்டும் என்ற காட்டயத்தில் உள்ளது பா.ம.க. பாஜக அதிமுக கூட்டணி இருந்தால் அதில் இடம் பெறலாம் என நினைத்த நேரத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதனால் திமுக பக்கம் சாயும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை புரிந்து கொண்ட திமுக பாமக வேணுமா அல்லது விசிக வேணுமா என்று ஆலோசனையை துவங்கியுள்ளது.
அறிவாலய தகவல்களோ பா.ம.கவை உள்ளே கொண்டுவாருங்கள் பொன்முடி போன்ற அமைச்சர்கள் இல்லாத நிலையில் வட தமிழ்கத்தில் பாமகவின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும் என சீனியர்கள் கூறி வருகிறார்கள்.
அதே போல் விசிக விலகினாலும் அதன் ஓட்டுகள் அதிமுகவிற்கு ஒரு பங்கு போகலாம். மீதம் நாம் தமிழர் தான் அறுவடை செய்யும். திமுக பாமக கூட்டணி எளிதில் வெற்றி பெற முடியும் என்ற கணக்கை போட்டுள்ளது திமுக.
திமுக தேமுதிக பாமக கூட்டணி அமைத்தால் மாபெரும் கூட்டணியாக மாறும். இதற்கு மாற்று கூட்டணி எப்படி அமையும் அதிமுகமற்றும் பாஜக கூட்டணி குறித்து அடுத்த பகுதியில் காணலாம்…
கட்டுரை : ரித்வன்