விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் அறிக்கை:
விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ‘சணல் பை மற்றும் இதர பொருட்கள் தயாரித்தல் மற்றும் சி.சி.டி.வி., கேமரா பொருத்துதல், பழுது நீக்குதல் இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் 13 நாட்கள் நடக்கிறது.இந்த பயிற்சிகளுக்கான நேர்காணல் வரும் 11ம் தேதி நடக்கிறது. இப்பயிற்சிகளில் சேர 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும்.
8ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கு மேல் உள்ள படிப்பு பயின்றிருக்க வேண்டும்.தங்கள் பெயரிலோ, குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ 100 நாள் அட்டை இருந்தாலும், கிராமப்புறத் தோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிக்கு தேவையான ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, கல்விச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், நுாறு நாள் வேலை அட்டை நகல்களை அவசியம் கொண்டு வர வேண்டும்.இது பற்றி மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் தொலைபேசி 04146 294115 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.