கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர பகுதியில் ரோட்டரி கிளப் ஆப் திருக்கோவிலூர் டெம்பிள் சிட்டி சார்பில், ரோட்டரி சங்க தலைவர் முனைவர்.M.செந்தில்குமார் தலைமையில் மாதாந்திர இரண்டாவது ஆய்வுக் கூட்டமானது சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் ரோட்டரி சங்க செயலாளர் கோதம்சந்த் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்வில் கண் தான முகாம், இரத்த தான முகாம் மற்றும் ரோட்டரி சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி பணி குறித்து ஆலோசனை ஆனது நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் ஏ.வி.சரவணன், அமரஜோதி பாபு, ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்நிகழ்வின் இறுதியில் ரோட்டரி சங்க உறுப்பினர் முத்துக்குமாரசாமி நன்றியுரை கூறினார்.