திருக்கோவிலூர் நகராட்சியில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி 10 லட்சம் மதிப்பில் நகராட்சி 14வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த பூபதி என்பவர் தமது தேர்தல் வாக்குறுதியில் தான் வெற்றி பெற்றால் தனது வார்டில் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் வார்டுகென இலவச ஆம்புலன்ஸை தொடங்குவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் வெற்றி பெற்ற உடனே 14 வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை வைத்தார்.
10 லட்சம் மதிப்புள்ள இலவசமாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்தி தருவதாக கூறியிருந்த நிலையில் அதையும் அமைச்சர் பொன்முடி மூலமாக இன்று இலவச ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் துவங்கி வைத்தார். அதன் பின்னர் 1000 பொதுமக்களுக்கு கையில் இயந்திரம் குக்கர் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் என 2 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.கௌதமசிகாமணி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிமனன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனகராஜ்,ஒன்றிய செயலாளர் தங்கம், திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் பொன்முடி:
ஆளுநர் ரவி தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் தரம் குறைவாக இருப்பதாக கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு?
நேற்றைய தினமே அமைச்சர் உதயநிதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் இது பற்றி நன்றாக தெரிவித்திருப்பதாககூறினார். கல்வி வளர்ச்சி என்பது ஆரம்ப கல்வியாக இருந்தாலும் உயர் கல்வியாக இருந்தாலும் தமிழகத்தில் தான் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது என மக்கள் அறிவார்கள் என்று கூறினார்.