கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நான்கு முனை சந்திப்பு, ஐந்து முனை சந்திப்பு மற்றும் மனம்பூண்டியில் உள்ள நான்கு முனை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டினர்.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் கட்சியின் கொடியும் கட்சிக்கான பாடலையும் அறிமுகம் செய்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றி கழகத்திற்கான அனுமதி கோரி இருந்தனர். இன்று இந்திய தேர்தல் ஆணையமானது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சிக்கு அனுமதி வழங்கி உள்ளது.
இதனை அடுத்து அக்கட்சியை சேர்ந்த திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் மணிமாறன் தலைமையில் நிர்வாகிகள் திருக்கோவிலூரில் பிரதான சாலைகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழக வெற்றிக் கழகம் வாழ்க! தளபதி விஜய் வாழ்க! தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்! என கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.