கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட,ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில்,ரோட்டரி சங்கம் சார்பில், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் சிவகுமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கான இன்ட்ராக்ட் கிளப் தொடங்கி வைக்கப்பட்டு, அதன் பின்பு திருக்கோவிலூர் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு ₹.20,000 ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டது.மேலும் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு ரூபாய் 11,000 நிதி வழங்கப்பட்டது. ரோட்டரி சங்கம் சார்பில் அடுத்த கட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் ராமலிங்கம், ரோட்டரி சங்க செயலாளர் கோதம்சந்த், பொருளாளர் சௌந்தரராஜன் ,சாசன தலைவர் எஸ்.எஸ்.வாசன், வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர்கள் சுனில்குமார்,ரிங்கு,பள்ளி முதல்வர் அருள்,ரோட்டரி மாவட்ட கான்பரன்ஸ் செயலாளர் கோபி, சங்கராபுரம் ரோட்டரி சங்க நிர்வாகி முத்துக்கருப்பன், கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன்,செயலாளர் ராமசந்திரன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி, ராஜசுப்பிரமணியம்,ஏ.வி.சரவணன்,நடராஜன்,வாசிம்ராஜா,அக்பர்,பாஸ்கர், ஜீவ.சீனிவாசன்,கல்யான்குமார்,அமரஜோதி பாபு,சந்திரசேகர்,சதிஷ்குமார்,வசந்தன்,வக்கீல் ராஜேஷ்,ராஜேஷ்குமார், RCC உறுப்பினர்கள் சிதம்பரநாதன்,தேவி பாலமுருகன், குருமூர்த்தி, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.