விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகில் திருக்கோவிலூர் – விழுப்புரம் நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் தண்டவாளத்தின் வழியாக வடகரைதாழனூரில் இருந்து திருக்கோவிலூர் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற லாரி தண்டவளத்தை கடக்க முயன்ற போது தண்டவளத்தின் முன்பு இருக்கும் தடுப்பு கட்டை மீது அதிக உயரத்தில் ஏற்றியிருந்த கரும்புகள் மோதி கீழே சரிந்ததில் சாலை முழுவதும் கரும்புகளால் மூடப்பட்டு அரை மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், இந்த கரும்பு சரிந்த நேரத்தில் ரயில் தண்டவாளங்களின் குறுக்கிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன அது ரயில் வரும் நேரம் என்பதால் துரிதமாக செயல்பட்ட அரகண்டநல்லூர் போலீசார் ஜேசிபி உதவியோடு சாலையில் கிடந்த கரும்புகளை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.