மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, 2023, ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தார்.
முன்னதாக, ஜாமீன் வேண்டி அவர் அளித்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்துவந்தன.
இந்தநிலையில் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக கடந்துவிட்ட செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு அளித்தார்.சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபத்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜி 471 நாட்கள் பிறகு சிறையில் இருந்து வெளியே வருகிறார்
1) ரூ.25 லட்சம் மதிப்பிலான தலா 2 உத்திரவாத பிணை பத்திரங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
2) திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
3) வாய்தா கேட்காமல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
4) சாட்சியங்களை கலைக்கவோ, அச்சுறுத்தவோ கூடாது.
போன்ற நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை
செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை சிறையில் இருந்து வெளியே வருவார் என கூறப்படுகின்றது.