திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகவும் மூத்த அரசியல்வாதியாகவும் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் உயர்கல்வித்துறையை நீக்கி வனத்துறை அமைச்சராக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது.
தனது இளமை காலம் முதல் தற்போது வரை திமுகவில் தனக்கென தனி இடத்தை பதித்த அமைச்சர் பொன்முடி அவரது ஆற்றல் திறமையின் காரணமாக சட்டத்துறை, கனிம வளம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிக்காட்டி இரண்டாவது முறை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில் மூத்த அமைச்சராக உள்ள பொன்முடியின் உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை மாற்றி அவருக்கு வனத்துறை அமைச்சராக பதவி வழங்கியது உள்ளபடியே திமுக கட்சியினருக்கும் அவரது தொகுதிவாழ் ஆதரவாளர்களுக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாற்றத்தை அமைச்சர் பொன்முடி ஏற்றுக் கொண்டாலும் அவரது தொண்டர்கள் மத்தியிலும் தொகுதி திமுகவினர் மத்தியிலும் சலசலப்பு எழுந்து வருகிறது.
தனது திறமையால் மட்டுமே திமுகவில் இந்த ஒரு உச்சத்தை அமைச்சர் பொன்முடி அடைந்தார் என்பதில் எந்தவித மாற்றமும் இருக்க முடியாது.
கலைஞரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த பொன்முடி அவரது திறமையின் காரணமாக பல்வேறு பொறுப்புகளை கலைஞர் இருந்தபோது வழங்கினார். வழங்கிய துறைகளில் அமைச்சராக சிறந்து விளங்கியவர் பொன்முடி.
தற்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் அவர்களின் படைத்தளபதிகளில் முதல் ஆளாக அமைச்சர் பொன்முடி திகழ்கிறார் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
இருந்தபோதிலும் இந்த அமைச்சரவை இலாக்கா மாற்றத்தில் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை.
படிப்பு, திறமை என அனைத்திலும் முன்னிலை வகிக்கும் மூத்த அமைச்சர் பொன்முடிக்கு வனத்துறை வழங்கியதில் தமிழ்நாடு அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே சொல்ல முடியாத தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.
மீண்டும் அமைச்சரவை மாற்றம் உருவாகும் எனில் தமிழ்நாடு அரசும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே ஒருமித்த பொன்முடி ஆதரவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.