விழுப்புரம் மாவட்டம் முகையூர் வடக்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒதியத்தூர், மேல்வாலை, ஒடுவன்குப்பம், இருதயபுரம், ஆலம்பாடி கூட்ரோடு உள்ளிட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு மற்றும் திமுக 75 ஆண்டு பவள விழாவை ஒட்டு திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முகையூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார். பின்னர் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.கௌதமசிகாமணி கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கட்சி கொடி ஏற்றி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
அப்போது பேசிய அவர் 75 ஆண்டுகாலம் இந்தியாவிலே ஒரு கட்சி ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறது என்றால் அது திமுக தான். அதற்கு காரணம் இங்குள்ள கிளைகழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் தான்.
100 ஆண்டுகள் ஆன காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றம் இந்திய் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கூட நமைவிட ஒரு ஆண்டு அதிகம் 76 ஆண்டுகள் ஆகிறது தொடங்கி. ஆனால் இன்று பார்த்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை, இந்தியாவில் மூன்று நான்கு மாநிலங்களில் தான் ஆட்சியில் உள்ளது, கம்யூனிஸ்டு கட்சியும் பெரிய பெரிய ஆட்சியில் இல்லை, 75 ஆண்டுகள் ஆகியும் இன்றும் ஆட்சியில் இருக்கின்ற ஒரு கட்சி என்றால் அது திமுக தான்.
அந்த அளவிற்கு சிறப்பாக தலைவர் கலைஞர் அவர்கள் 50 ஆண்டுகள் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார். அந்த வழியில் தற்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்று திராவிட முன்னேற்றக் கழக தலைவராக பொறுப்பேற்று மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இதுவரை அவர் தலைவராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற பத்து தேர்தலிலும் வெற்றி, அந்த வெற்றிக்கு காரணம் இங்குள்ள சகோதரர்கள் தான். அந்த அளவிற்கு மிகச் சிறப்பான ஆட்சியையும் கட்சியையும் முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் மற்றொரு முக்கிய காரணம் யார் என்று கேட்டால் நம்முடைய உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அதன் காரணமாக தான் நேற்று அவர்கள் இந்த தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அவர் பல அடி பாய்வார் உங்களுக்கே தெரியும் ஒரு செங்கல்லை வைத்து இந்த பாரத பிரதமரையே ஓட ஓட விரட்டினார். அன்று அவர் வெறும் இளைஞரணி செயலாளர் மட்டும்தான், ஆனால் இன்று தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்னென்ன செய்வார் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.
எதிர்க்கட்சி என்ன ஆகிற ஆகப் போகிறது என்று யாருக்கும் தெரியவில்லை அந்த அளவிற்கு அவர்கள் நடுநடுங்கிப் போய் உள்ளார்கள். அந்த பயத்தில் தான் நேற்று எதிர்க்கட்சிகள் எல்லாம் எதற்கு அவருக்கு துணை முதல்வர் பதவி, உங்களுக்கு என்ன ஆயிற்று? 234 தொகுதிகளில் போட்டியிட்டு நாங்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளோம் ஆட்சி அமைத்துள்ளோம், தலைவர் முதல்வராக உள்ளார் எங்கள் கட்சியில் அவரை துணை முதல்வராக ஆக்கி உள்ளோம். இவர் துணை முதல்வர் ஆனதால் அவர்களுக்கெல்லாம் பயம் இனிமே அவர்களால் எழுந்திருக்கவே முடியாது என்ற பயத்தில் பொறாமையிலே உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர். இதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் மிகச்சிறப்பாக பணியாற்றுவார் இன்னும் 25 ஆண்டுகள் அல்ல 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கும் அந்த அளவிற்கு ஆட்சி நடத்தப்படுகிறது. அவர்களது வழியிலேயே வந்தவர் நமது அமைச்சர் பொன்முடி. அவர் இந்த தொகுதிக்கு என்னென்னவெல்லாம் செய்துள்ளார் என்றால் பட்டியல் இட்டு கொண்டே போகலாம் அரசு கலைக் கல்லூரி ஆகட்டும் 60 கோடி மதிப்பில் மாவட்ட மருத்துவமனையாகட்டும் என திருக்கோவிலூர் தொகுதியில் அமைச்சர் பொன்முடி கொண்டு வந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.