கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சியுடன் தேவியகரம் மற்றும் டி.கீரனூர் ஆகிய இரண்டு கிராம பஞ்சாயத்துக்கள் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் அரசு அறிக்கை ஒன்று வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன்னர் டி.கீரனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை திருக்கோவிலூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று உளுந்தூர்பேட்டை திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று தேவியகரம் கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தங்களது கிராமத்தை திருக்கோவிலூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த குமார் சிங் ஐ சந்தித்து மனு அளித்தனர்.
பொதுமக்களின் மனுவைப் பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர், மனு குறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்திற்கு தெரிவிப்பதாக கூறினார்.