- சென்னையில் சில மணி நேரங்களிலேயே 5 சென்டிமீட்டர் அளவுக்கு கொட்டிய மழை. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனுக்குடன் அகற்றம்…
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டும் மழைக்கு நடுவே நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. கடந்தாண்டு ஏற்பட்ட பாதிப்புகள் போல ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக உறுதி….
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை அளவு மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை. மேலும் மழைப் பொழிவைப் பொறுத்து ஏதேனும் விடுமுறை அறிவிப்பு இருந்தால் அது குறித்த தகவல் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படும்.
- மாவட்ட ஆட்சித் தலைவர்
- வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறுகிறது..சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை.
- கனமழை எச்சரிக்கையால் இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கம்…சென்னை மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அளிக்க ஏற்பாடு.
- சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒடுவன்காடு பகுதியில் ராஜா என்பவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரம்.
- மெய்த்தி, நாகா, குக்கி இனங்களைச் சேர்ந்தத எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஅரசு அழைப்பு..மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைக்கு தீர்வு காண முயற்சி…
- மகளிர் டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நியூசிலாந்து.. பாகிஸ்தானின் தோல்வியால் இந்தியாவின் அரையிறுதி கனவு தகர்ந்தது..