விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வந்தார். இந்த ஆய்வின்போது திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவம் குறித்தும், கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது பெற்றோர் ஒருவர் கேட்டு கொண்டதற்கு இணங்க மாவட்ட ஆட்சியர் அவர்களது பெண் குழந்தைக்கு திருமாலினி என பெயர் வைத்தார்.
பின்னர் மருத்துவமனையில் கழிவறைகள் சுத்திகரிக்கப்படுகின்றனவா? முறையாக தண்ணீர் வருகின்றதா மற்றும் மருத்துவர்கள் பணிக்கு வருகிறார்கள் மருந்துகளின் இருப்பு மருத்துவர்களின் வருகை உள்ளிட்டவைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.