விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் அக்கட்சியில் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டார்.
பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்:
அண்ணா தொடங்கிய திமுக இப்போது இல்லை, ஆனால் அண்ணா தொடங்கிய கட்சிக்கு 75 ஆண்டு பவளவிழா இப்போது கொண்டாடுகிறார்கள், ஆனால் நாம் தற்போது 52 ஆண்டுகள் முடிந்து 53வது ஆண்டில் உள்ளோம், 75 ஆண்டுகள் ஆன திமுக 25 ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருந்தது, ஆனால் நாம் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தோம் என கூறினார்.வெள்ளை அறிக்கை கொடுங்க என்று கேட்டதற்கு கத்துகுட்டி உதயநிதி சொல்கிறார், தண்ணீர் வடிந்து விட்டதே அது தான் வெள்ளை அறிக்கை என்று, ஒன்னுமே தெரியல,
துணை முதலமைச்சர் என்பது உங்களுக்கு மெஜாரிட்டி இருக்கு நீங்க ஆக்கிக்கோங்க நாங்க ஒன்னும் சொல்லல, ஆனால் பக்கத்தில் ஒரு மனுசன் கலைஞருக்கு, துணையாக இருந்து, அண்ணாவுக்கு துணையாக இருந்து, ஸ்டாலினுக்கு துணையாக இருந்து, அடுத்து இன்பநிதிக்கும் துணையாக இருப்பேன் நான் கோபாலபுரத்து காவலன் என்று சொன்னரே அந்த பெரிய மனுசன் துரைமுருகன் அவருக்கும் சேத்து கொடுத்திருக்கலாம்.
ஆனால் அதற்கு மனமில்லை.பொன்முடி நேற்று கூட இந்த மாவட்டத்தில் பேசியிருக்கிறார், அடுத்த முறை எனக்கு சீட்டு தருவாங்கலோ தரமாட்டாங்கலோ என்று, ஏனென்றால் நிலவரம் திமுகவில் கலவரமாக உள்ளது என்று கூறினார்.
இந்த நிகழ்வில் திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர்,ராமலிங்கம், நகர செயலாளர் ஸ்ரீதர்,கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாக்யராஜ் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சீனிவாசன்,மாவட்ட எம்ஜியார் மன்ற செயலாளர் தங்கபாண்டி, உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பிர அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதியில் மாவட்ட செயலாளார் குமரகுருக்கு புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி முருகன் நடராஜன் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.