கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் ரோட்டரி சங்கம் சார்பில், உலக போலியோ தினத்தை ஒட்டி,விழிப்புணர்வு பேரணியானது, ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிழ்வில் ரோட்டரி சங்க செயலாளர் கோத்தம்சந்த் அனைவரையும் வரவேற்றார்.இந்த பேரணியினை திருக்கோவிலூர் உட்கோட்ட டிஎஸ்பி பார்த்திபன் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியானது நகரின் முக்கிய பகுதியான வடக்கு வீதி,பேருந்து நிலையம், மருத்துவமனை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.இந்த பேரணியில் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி, சாரதா வித்யாஷ்ரம் பள்ளி,லட்சுமி வித்யாலயா பள்ளி விவேகானந்தா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போலியோ குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த பேரணியில் ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி தேவசேனாதிபதி, முன்னாள் ரோட்டரி தலைவர் வாசன்,வித்யா மந்திரி பள்ளியின் தாளாளர் சுனில்குமார்,விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளர் முருகன்,லஷ்மி வித்யாலயா பள்ளியின் தாளாளர் ராஜசுப்பிரமணியம்,முன்னாள் ராணுவ வீரர்கள் கல்யாண் குமார்,முஜூர்கான்,திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழக நிர்வாகி அப்பர் சுந்தரம்,தமிழ் சங்கத் தலைவர் உதயன்,நாடொப்பண செய் அறக்கட்டளை நிர்வாகி கதிர்வேல்,ரோட்டரி சங்க உறுப்பினர்கள் முத்துக்குமாரசாமி,AV.சரவணன்,காமராஜ்,நடராஜன் மகாவீர்சந்த்,ராமலிங்கம்,சந்திரசேகர்,ரவிசந்திரன்,சேகர்,ராஜேந்திரன் வசந்தன்,வழக்கறிஞர் ராஜேஷ்,ரமேஷ், ராஜேஷ்குமார்,கிஷார்,ஆர்சிசி நிர்வாகிகள் சிதம்பரநாதன்,தேவிபாலமுருகன்,ஹரிகிருஷ்ணன்,மனோஜ், ரமேஷ்,முரளி,செந்தில்குமார்,ராதாகிருஷ்ணன் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சி இறுதியில் ரோட்டரி சங்க பொருளாளர் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.