கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ
வசந்தம் K. கார்த்திகேயன் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக திமுக சின்னமான “உதயசூரியன் சின்னத்தாலேயே” திமுக எம்எல்ஏ வசந்தம் K. கார்த்திகேயன் படத்தை வரைந்தார்.
ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரிஷிவந்தியம் ஒன்றியத்தை தலைமையிடமாகக் கொண்டு வாணாபுரம் புதிய வருவாய் வட்டமாக அறிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி நபர்களுக்கு 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்பட்டது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சில ஊராட்சிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, வருவாய்த் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது, மண் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஜல்லி சாலைகளாக மேம்படுத்தப்பட்டன.
வறண்ட ரிஷிவந்தியத்தை “வசந்தம்” ரிஷிவந்தியமாக மாற்றியவர் வசந்தம் கார்த்திகேயன் ஆவார், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் வசந்தம் கார்த்திகேயன் அவர்கள் கள்ளக்குறிச்சியை திமுக கழக குறிச்சியாக மாற்றியவர் அவரின் பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உதயசூரியன் சின்னத்தையை நீர் வண்ணத்தில் தொட்டு ஐந்து நிமிடங்களில் “உதயசூரியன் சின்னத்தாலேயே” ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் படத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.