தற்போது சமூக வலைதளைங்களில் வைரல் வனிதா விஜயகுமார் பவர் ஸ்டார் கல்யாணம் புகைப்படம் தான். இது படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் ஆனால் சமூக வலைத்தளங்களில் உண்மையாக வனிதா விஜயகுமாரும், நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசனும் கல்யாணம் செய்து கொண்டார்கள் எண்ணென்று தீயாக பரவியது. இதனை தொடர்ந்து இந்த புரளிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு செய்தியாளர்களை சந்தித்தார் வனிதா விஜயகுமார்
செய்தியாளர்களிடம் பேசிய வனிதா விஜயகுமார் நானும் பவர் ஸ்டார் சீனிவாசனும் கல்யாணம் செய்து கொண்ட புகைப்படம் , பிக்கப் டிராப் படத்தின் முதல் போஸ்டர்கள் என கூறினார். மேலும் இந்த படத்தை பவர்ஸ்டார் தான் இயக்குகிறார் என்ற தகவலையும் தெரிவித்தார்.
மேலும் சற்று கோபத்துடன் பேசிய வனிதா விஜயகுமார், இரண்டு நடிகர்கள் சேர்ந்து திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் வெளியிட்டால் அதை உண்மையான திருமணம் என்பதா. இதை வைரல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை இது குறித்து தேவையில்லாத சர்ச்சைகளைஎழுப்ப தேவையில்லை.
சமுதாயத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் தேவை. ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்களுக்கு இருபத்திலை. ஒரு ஆண் 4 திருமணம் செய்தால் அதை பற்றி பேச ஆள் இல்லை. அதே நேரத்தில் ஒரு பெண் செய்தால் 4 திருமணம் செய்தால் அதை சர்ச்சையாக்கி பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் நான் நான்கு அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை.
சமுதாயத்தில் எப்போதும் பெண்களைப் மட்டும் அவதூறாக பேசி வருவதுதான் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு பல ஆண்களுடன் வாழ்ந்து வந்தால் தான் தவறு. நான் முன்பு சொன்னது போல் 40 கல்யாணம் பண்ண மாட்டேன், அதை ஏன் எதற்காக அவ்வாறு சொன்னேன் என்பது உங்களுக்கு புரியும். தற்போதைய நிலையில் நான் திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எதுவும் இல்லை என சரவெடியாக வெடித்தார் வனிதா விஜயகுமார் அவர்கள்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுகையில், தற்போது உள்ள சமூகத்தில் 100க்கு 90 பேர் முறையான வாழ்க்கையை வாழ்வது இல்லை. அதை வெளியே சொல்லாமல் வாழ்ந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் வனிதா விஜயகுமார் ஒரு இரும்பு பெண்மணி என அவர் பங்குக்கு பேசினார்.