கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சிவனார்தாங்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த செல்வம்.
இவர் எதிர்வரும் செப்டபர் 5 ஆசிரியர் தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பென்சில் அழிக்கும் ரப்பரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது உருவத்தை இரண்டு மணி நேரத்தில் கத்தி மற்றும் ஊசி கொண்டு செதுக்கினார். இவர் கடந்த பல ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலவிதமான ஓவியங்கள் வரைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.