கள்ளக்குறிச்சி நகரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1920 மது புட்டிகள் பறிமுதல் ஒருவர் கைது !!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அரசு மதுக்கடைகளுக்கு தேர்தலுக்கு முன்பு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மாவட்டத்தில் அரசு மதுபுட்டிகள் கடத்தி விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டார்
அதன்பேரில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரியப்பா நகர் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் மூட்டை மூட்டையாக மதுபுட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சரவணன் என்பவரது வீட்டில் மூட்டைகளில் 1,920 மது புட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மது புட்டிகளை பறிமுதல் செய்து சரவணனை கைது செய்தனர்
மேலும் சரவணனுக்கு மொத்தமாக மது விற்பனை செய்த மதுக்கடை மேற்பார்வையாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்