அஜித் என்றால் எல்லோருக்கும் நியாபகம் வருவது நல்ல மனிதர், அடுத்து பைக் ரேசர் என்றுதான் அவரை போல் பலரும் பைக் ஓட்ட வேண்டும் என்று திரை உலகினர் பலரும் ஆசைப்பட்டுவருகிறார்கள். இந்த நிலையில் அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி படமான வரலாறு படத்தில் நாயகியாக நடித்த கனிகா தற்போது பைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக உளளதாக தெரிவித்துள்ளார்.
நடிகை கனிகா இப்போது வயது 40 ஆகும். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்தவர் கனிகா. பைவ் ஸ்டார், வரலாறு, ஆட்டோகிராப் போன்ற தமிழ் படங்களிலும் நடித்து தமிழக மக்களின் மனதில் இடம்பெற்றார். தற்போது மலையாளத்தில் பிசியான குணசித்ர நடிகையாக இருக்கிறார்.
இவர் நடிக்கும் படங்களின் புகைப்படங்களையம் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இன்ஸ்ட்ராகிராமில் லட்சக்கணக்கில் அவரை பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் இவர் வெளியிட்டுள்ள புல்லட் பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இவர் தனது பைக் ஓட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் “எதையும் கற்றுக்கொள்ள காலதாமதம் செய்யகூடாது. சரியான தருணத்திற்காக காத்திருக்கவும் கூடாது. ஒவ்வொரு தருணத்தையும் நம்முடையதாக்கி கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.