அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுடன் மூன்றவது படத்தை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத்இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர்.
நடிகர் அஜித் அவர்கள் மறைந்த நடிகை ஸ்ரீதேவியுடன் இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் கௌவரவ தோற்றத்தில் நடித்தார். அந்த வேளையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கு வாக்குறுதி கொடுத்துள்ளார்.
அந்த வாக்குறுதியின் நிறைவேற்றும் வகையில் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றது. இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியான இந்தி திரைப்படமான பிங்க் என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது.
மேலும் அந்த படத்தினை வினோத் அவர்களின் இயக்கம் அஜித்திற்கு பிடித்துப்போகவே அடுத்த படத்திற்கு கால்சீட் கொடுத்தார். அந்த படம் தான் அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம். இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்துள்ளார். போனி கபூர், அஜித் குமார், ஹெச். வினோத் இணைந்துள்ள இரண்டாவது திரைப்படம் இதுவாகும்.
வலிமை படம் அப்டேட்க்கு அஜித் ரசிகர்கள் ஏங்கி கொண்டிருந்த வேளையில் அடுத்தடுத்து பாடல் மற்றும் டீசரை வெளியிட்டது. தயாரிப்பு குழு. இரண்டிற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் மேலும் இனிப்பான செய்தியை வெளியிட்டது தயாரிப்பு குழு
வலிமை படத்தின் ரீலிஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் அன்று வலிமை படம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பு அஜித் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு இனிப்பான செய்தியை கொடுத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் அஜித்குமாரின் அடுத்த படத்தையும் தானே தயாரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தையும் ஹெச். வினோத் இயக்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச்.வினோத்தை பாராட்டியுள்ள போனி கபூர், ஹெச்.வினோத்தின் திரைப்படங்கள் அவரை பற்றி பேசும் என்றும் தனது திரைப்படங்கள் மூலம் தன்னை வெளிப்படுத்துவதில் அவர் நம்பிக்கை வைத்துள்ளார் என்றும் போனி கபூர் கூறியுள்ளார்.