பாடும் நிலா பல சாதனைக்கு சொந்தக்காரர் இவர் பாடிய பாடல்களை கேட்காத காதுக்குள் இல்லை ரசிக்காத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம் அவர் தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam, இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் என பன்முகத்தன்மை கொண்டவர்.
இவர் ரசிகர்களால் எஸ்.பி.பி. (SPB) என்ற முன்னெழுத்துகளாலும் திரை உலகத்தில் எஸ். பி. பாலு என்றும்அழைக்கப்பட்டவர். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாகப் பணியாற்றியுள்ளார். 1966 முதல் திரைப்படங்களில் பாடத் தொடங்கி, 50,000திற்கும் அதிகமான பாடல்களை 16 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்
படும் நிலா எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ம் தேதி காலமானார்.
அவரது மறைவு தமிழக மக்கள் மனதில்மட்டுமல்ல இந்திய திரை ரசிகர்கள் நட்சத்திரங்கள் இடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு அவரது முதல் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இவர் கடைசியாக பாடியது சன் பிக்சர் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இமான் இசையில் உருவாகி வரும் அண்ணாத்த படம். எனவே அவரது நினைவு நாளை முன்னிட்டு படக்குழுவினர் அவர் கடைசியாக பாடிய பாடலை வெளியிடுவார்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வெளியாகவில்லை.
அவரது நினைவு நாளில் கொண்டாட்டம் வேண்டாம் என்பதற்காக படக்குழுவினர் அன்று படத்தின் பாடலை வெளியிடவில்லை. என்று கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் 4ம் தேதி மாலை 6 மணிக்கு பத்ம விபூஷன் எஸ்பிபி பாடியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதில் முக்கியத்துவம் என்னவென்றால் ரஜினி இன்ட்ரோ பாடல் இது. காலம் காலமாக ரஜினி இன்ட்ரோ என்றாலே அது எஸ்பிபி தான். அது மிகப்பெரிய வெற்றி அடையும். இந்தப் பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து இசை ரசிகர்களும் காத்திருக்கிறார்கள் எஸ்பிபி பாடிய கடைசி பாடல் கேட்க!