நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே நான்கு பேரை கொன்ற டி–23புலியை சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக, கேரள வனத்துறையினர், தமிழக அதிரடிப்படை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, பல குழுக்களாக பிரிந்து புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
‘ட்ரோன்’ கேமராவும் பயன்படுத்தப்பட்டது. சிப்பிபாறை வகையை சேர்ந்த, ‘அதவை’ என்ற மோப்ப நாயும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.புலியை சுட்டுப்பிடிப்பது அல்லது சுட்டுக்கொல்வது என முடிவு செய்யப்பட்டு களத்தில் இறங்கியுளார்கள்.
அரியவகை விலங்கான புலிகளின் குணம் வேட்டையாடி உண்பதுதான். காட்டுப்பன்றிகள் போல் விவசாயிகள் நிலத்தை அழித்து விவசாயப் பயிர்களை அழிப்பது போன்ற செயல்களில் புலிகள் ஈடுபடுவது கிடையாது. பரவலாக இருக்கும் வன பகுதியை அழித்து காட்டை சுருக்கி மனிதன் மோசமாக ஆக்கிரமிப்பு செய்தால் அங்கு இருக்கும் வன விலங்குகள் தங்கள் தேவைக்கு எங்கே போகும்.?
ஊருக்குள் தான் வரும்.
காட்டில் ரோடு போட்டு லாரி முதல் கார் வரை செல்லும் வழிகளை உருவாக்கி கொண்டு, சாகச பயணம் என்று காட்டிற்குள் நீங்கள் ஊடுருவி செல்வது யார் குற்றம்.? இந்த பூமி மனிதன் மட்டுமே வாழ உருவானது போல, இது போல நடவடிக்கைகள் எல்லாம் இயற்கை சீரழிவின் அடையாளம் என்பதை தவிர வேறில்லை.
14 வயது இருக்கும். வயது முதிர்வு காரணமாக வன எல்லை கிராமங்களில் சுற்றி வந்துள்ளது. புலிகளுக்குள் வசிப்பிடம் தொடர்பாக சண்டை எழுவதுண்டு. மற்றொருஆண் புலியிடம் ஏற்பட்ட சண்டையில் தோல்வி அடைந்து, வனத்தில் இருந்து வெளியேவிரட்டப்பட்டிருக்கலாம். இதனால், வாழ இடம் இல்லாமல் கூட, கிராமங்களை ஒட்டிய புதர்களில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்கள்;
மேலும் புலி குறித்து சமூக வலைத்தளங்களில் கொல்ல கூடாது SaveT23 என்ற ஹாஸ்டக் வைரலானது. ஆனால் இன்னமும் பீட்டா அமைப்பு வாய் திறக்காமல் உள்ளது இது எதனால் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.