பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள சேவைகள் முடங்கியது. கடந்த சில மணி நேரங்களாக சேவைகள் முடங்கியதால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் பயனாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர், 7 மணி நேரத்திற்கு பிறகு இவை அனைத்தும் இயங்கத் தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேவை முடங்கியதாக பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது.
சுமார் 7 மணி நேரம் ஏற்பட்ட இந்த முடக்கம் உலகில் மிகுந்த அதிர்வுகளை ஏற்படுத்தியது, இன்றைய உலகம் சூரியன் சந்திரன் மழைக்கு அடுத்து இயங்குவது இந்த ஊடகங்களால் என்பது நிஜம், அந்த அளவு வாழ்வோடு இந்த மாய நுட்பங்கள் கலந்துவிட்டன முடக்கத்துக்கான காரணத்தை நிறுவணம் சொல்லவில்லை ஆனால் இது திட்டமிட்ட ஹேக்கிங் தாக்குதல் என அறியபடுகின்றது.
இந்த கொரோனா காலத்தில் உலகமெல்லாம் பொது முடக்கம் இருந்தது போல் ஏதோ தொழில்நுட்ப கொரோனா தாக்கி முகநூல் & கோஷ்டிகளும் தனிமைபடுத்தபட்டு முடங்கியிருக்கின்றார்கள் நிலைமை கட்டம் கட்டமாக மெல்ல சீரடைந்தது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்,: ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப்.. தனது ஃபேஸ்புக் பக்கத்தில் “மன்னிக்கவும், இந்த சேவைகளை நீங்கள் எவ்வளவு சார்ந்திருக்கிறீர்கள் என தெரியும். இப்போது ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்சப் மீண்டும் இயங்கத் தொடங்கியது