ரூபாய் 1,999/- டவுன்பேமெண்ட் செலுத்தி ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை வாங்கிக் கொள்ளலாம். மீதத் தொகையை சரிவிகித மாத தவணை மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் வரும் தீபாவளி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்புகளையும், இதனை எப்படி சுலபமாக வாங்க முடியும் என்பதையும் தற்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனுக்காக பிரகதி என்ற பிரத்யேக மென்பொருளை (OS) கூகுள் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. உலகின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாக வெளிவர இருக்கும் ஜியோபோன் நெக்ஸ்ட், அருகாமையில் உள்ள ஜியோ மார்ட் டிஜிட்டல் கடைக்கு நேரில் சென்றோ அல்லது (jio.com) ஜியோ.காம் என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது ஒரு வாட்ஸ் அப் மெசேஜை அனுப்பவதன் மூலமோ வாங்கிவிட முடியும்.
மேலும் இந்த போனை வாங்குவதற்காக அட்டகாசமான வழிமுறை ஒன்றையும் ரிலையன்ஸ் அறிவித்திருக்கிறது. ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை 1,999 ரூபாய் டவுன்பேமெண்ட் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். மீதத் தொகையை சரிவிகித மாத தவணை மூலம் செலுத்திக் கொள்ளலாம். பரவலான வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் இது போல ஒரு நிதி ஏற்பாடு விஷேசமாக இந்த போனுக்காக செய்யப்பட்டிருக்கிறது.
ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனானது, ஒரு ஜியோ சிம் உடன் கிடைக்கும். அந்த சிம்மில் 18 மாதங்கள் அல்லது 24 மாதங்கள் பிளான் வாலிடிட்டியை பெறமுடியும்.
சிறப்பு அம்சங்கள்:
- பிராசசர்: குவால்காம் ஸ்னாப்டிராகன் (QM-215, Quad Core upto 1.3 Ghz)
- கேமரா: முகப்பு 8 எம்.பி, ரியர் 13 எம்பி
- டிஸ்பிளே: 5.45 இஞ்ச் மல்டி டச், கார்னிங் கொரில்லா கிளாசுடன்
- ஸ்கிரீன் ரெசல்யூசன் : ஹெச்டி + (720*1440)
- மெமரி : 2 ஜிபி ரேம், எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி இன்பில்ட்,
- பேட்டரி: 3500 எம்.ஏ.ஹெச்
- சிம் ஸ்லாட்: டூயல் சிம் (நானோ)
வைஃபை, புளூடூத் (வி4.1), மைக்ரோ யூஎஸ்பி, 35. எம்.எம் ஆடியோ ஜாக் போன்றவற்றுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் கிடைக்கிறது.