விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் சுடுகாடு அருகில் உள்ள முள் தோப்பில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வாலிபர் ஒருவர் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.இதில் அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் சென்று பார்த்த போது, இளைஞர் ஒருவர் பெண்ணை கொலை செய்ய முயற்சித்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பவம் குறித்து கண்டாச்சிபுரம் போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் கண்டாச்சிபுரம் காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போலிசார் வருவதை கண்ட இளைஞர் அங்கிருந்து தப்பிவிட, கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணை கண்டாச்சிபுரம் போலிசார் மீட்டு கண்டாச்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் தேடிவந்தனர். இந்த நிலையில், இன்று காலை ஒட்டம்பட்டு காப்பு காட்டில் மர்ம நபர் இருப்பதாக கண்டாச்சிபுரம் போலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்ற போலிசார் குற்றவாளியை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலிசாரின் விசாரணையில் குற்றவாளி கெடார் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் என்பதும் ஓட்டுனராக வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், பாதிக்கப்பட்ட பெண் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரது மனைவி மங்கலட்சுமி(27), என்பதும், இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து தற்போது இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மங்கலட்சுமியை திருமணத்திற்கு முன்னர் அவரது தாய் மாமன் மகனான கெடார் அடுத்த கக்கனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் குற்றவாளியான மணிகண்டன்(28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளான். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மங்கலட்சுமி தாய் வீடான ஒட்டம்பட்டு கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது மங்கலட்சுமிக்கும், மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவருக்கும் ஏற்பட்ட கள்ளதொடர்பால் மங்கலட்சுமி அடிக்கடி ஒட்டம்பட்டு கிராமத்திற்கு செல்வதாக கூறி மணிகண்டனுடன் உல்லாசமாக சுற்றிவந்துள்ளார்.
மேலும் சென்னையிலும் மங்கலட்சுமி வீட்டில் அவரது கணவர் கார்த்தி வேலைக்கு சென்ற போது மணிகண்டன் தனியாக மங்கலட்சுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தாய் வீடான ஒட்டம்பட்டு கிராமத்திற்கு வந்த மங்கலட்சுமி மணிகண்டனுடன் தினமும் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவர்களது இந்த கள்ளத்தொடர்பு சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்துள்ளது.இதில் நேற்றைய தினம் ஒட்டம்பட்டு காப்பு காட்டில் உல்லாசமாக இருந்துவிட்டு, பின்னர், கண்டாச்சிபுரம் நோக்கி இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
அப்போது வீ.புதுபாளையம் கிராமத்திலிருந்து கண்டாச்சிபுரம் நோக்கி வரும்போது, புதுப்பாளையம் கிராம எல்லையான சுடுகாடு அருகில் வரும் போது மங்கலட்சுமி சென்னைக்கு அவரது கணவரிடம் செல்லப்போவதாக கூறியுள்ளார். இதில் கோபமடைந்த மணிகண்டன், மங்கலட்சுமியிடம் ஊருக்கு போக கூடாது என்றும் என்னிடமே வாழ வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனைதொடர்ந்து, ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் உள்ள முள்தோப்பில் வாகனத்தை நிறுத்திவிட்டு மங்கலட்சுமியின் கழுத்தை வாகன சாவியில் இருந்த சிறு கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதில் வலி தாங்காமல் சத்தம்போட்டுள்ளார். சத்தம் போட்ட காரணத்தால் மங்கலட்சுமி அணிந்திருந்த துப்பட்டா மூலம் கழுத்தை நெருக்கி கொலை செய்ய முயன்றுள்ளதாக போலிசாரிடம் விசாரணையில் கூறியுள்ளான். விசாரணைக்கு பின்னர், 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த கண்டாச்சிபுரம் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.