கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் 25க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடி மக்களும் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் நேற்று இரவு மூன்று வீடுகள் இடிந்து விழுந்தது இதுபற்றி தகவல் அறிந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் திமுக சார்பாக அவர்களுக்கு அரிசி காய்கறிகள் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தொகைகளை வழங்கினார். பின்னர் இருளர் சமுதாய மக்கள் சார்பாக தாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா இல்லாமல் வசித்து வருவதாகவும் உடனடியாக தங்களுக்கு வீடு கட்ட பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் உடனடியாக பட்டா வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் பேசிய அமைச்சர் பொன்முடி இந்த பகுதியில் வசிக்கும் பழங்குடி இருளர் மற்றும் நரிக்குறவ சமுதாய மக்களுக்கு வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், கள்ளக்குறிச்சி மாவட்ட துணை பெருந்தலைவர் தங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் முருகன், புஷ்பராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்