தமிழக காவல்றை மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS, 06.12.2021-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை தலைவர் திரு.கபில் குமார் சரத்கார் IPS, விழுப்புரம் சரக காவல்துறை துணை தலைவர் திரு.பாண்டியன் IPS, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல்ஹக் IPS, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளலர் திரு.ஸ்ரீஅபிநவ் IPS, மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் திரு.பெருமாள் IPS, திருமதி.சாந்தி IPS, மாவட்ட டாஸ்மாக் மேலாளர், கலால் அலுவலர் மற்றும் காவல் அலுவலர்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை ஒழித்தல் மற்றும் மாவட்டத்தில் மதுவிலக்கு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அதனை தொடர்ந்து இன்று 07.12.2021 ந் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு (பொறுப்பு) கூடுதல் காவல்துறை இயக்குநர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS தலைமையில், காவல் துறை தலைவர் திரு.கபில் குமார் சரத்கார் IPS, காவல் கண்காணிப்பாளர்கள் கள்ளக்குறிச்சி திரு.ஜியாவுல்ஹக் IPS மற்றும் அமலாக்கம் திரு.பெருமாள் IPS ஆகியோர் கல்வராயன்மலையில் 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள், 70 காவலர்கள், 30 ஆயுதப்படை காவலர்கள் என மொத்தம் 100 காவலர்கள் சகிதம் 10 சிறப்புப்படைகள் அமைத்து அதிகாலை முதல் மதுவிலக்கு சம்மந்தமான அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கல்வராயன்மலை மேல்வாழப்பாடியில் 400 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், தோரணம்கட்டி வளைவு அருகே 1200 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், தாழ்கெண்டிகல் கிராமத்தில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், குரும்பாலூர் ஏரிக்கரை மேடு அருகே 3500 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும் மற்றும் கள்ளச்சாராயம் 270 லிட்டரும், சின்னதிருப்பதி கிராமம் அருகே 800 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழித்தனர்.
மேற்படி அதிரடியாக நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 270 லிட்டர் கள்ளச்சாராயமும், 8900 லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊரலும் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக காவல்துறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் அவர்கள், கள்ளச்சாராயத்தின் தீமைகளை மக்கள் உணர்ந்து அதனை கைவிட வேண்டும், பொதுமக்களுக்கு மதுவிலக்கு சம்மந்தமான தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது தமிழக அரசின் இலவச புகார் எண் 10581 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டார், மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ அல்லது அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்றாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.