இந்திய விமானப்படையில் குரூப் சி பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படை (IAF) சமீபத்தில் குரூப் சி சிவில் பதவிகளுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதில் சமையல் பணியிடங்களுக்கான 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பலாம். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி, எம்ப்ளாய்மென்ட் நியூஸ் (EMPLOYMENT NEWS) விளம்பரத்தில் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
இந்த பதவிக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன் சான்றிதழ் அல்லது கேட்டரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வேறு இடங்களில் 1 வருடம் வேலை பார்த்த அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து விண்ணப்பங்களும் வயது வரம்புகள், குறைந்தபட்ச தகுதிகள், ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராயப்படும். அதன் பிறகு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வழங்கப்படும். இந்த விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். எழுத்துத் தேர்வுவில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, எண் திறன், பொது ஆங்கிலம், பொது விழிப்புணர்வு மற்றும் வர்த்தகம் / பதவி தொடர்பான கேள்விகள் கொண்டதாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.